திங்கள், 6 ஆகஸ்ட், 2012

மனதின் நோய்களுக்கு மனமே மருந்தாகும் (கட்டுரை)

னித வாழ்க்கையின் அர்த்தத்தினையும் அதன் பெறுமதியையும் அறுதியிட்டுக் காட்டுவன வாழ்க்கையின் நடவடிக்கைகள்தாம்.

எந்த நடவடிக்கைக்கும அத்திவாரமமைத்துத் தருவது மனம்தான். மனமதன் வழிகாட்டலின் தொடர் பகுதியே சகல சாதனைகளுக்கும் வெற்றிகளுக்கும் முடிவெடுப்புக்களுக்கும் அத்திவாரமாக அமைகின்றது.

அதன் பக்குவத்தின் அளவுக்கும் அனுபவத்துக்கும்

சனி, 4 ஆகஸ்ட், 2012

தளத்தைத் தகர்த்தால் குழிக்குள் விழுவோம்

ப்பலொன்று நடுக்கடலில் ஓடுகின்ற போது
   பயணிகளின் மகிழ்ச்சியதன் அடிப்படையில் அந்தக்
கப்பலதன் மாலுமியின் கடமையதன் சீர்மை
   பக்குவமாய் அதற்குதவி செய்வதுதான் உண்மை
எப்பொழுதும் நம்நிலையின் ஏற்ற இறக்கம் தன்னில்
   எது எதற்கு எப்படியெனும் இலக்கணத்தி னோடு
எப்பொழுதும் நமைநடத்தும் சக்தியொன்று உண்டு
   எள்ளளவும் பிசகிடாத இயற்கையதன் பங்கு.

வியாழன், 2 ஆகஸ்ட், 2012

அநீதியே! உனக்குத்தான் சொல்கிறேன்! (கட்டுரை)

நீதியே! அழிவைச் செய்யும் தீயே! உன்னைக் கண்டு நான் அஞ்சவில்லை.ஆனால் பதறுகிறேன். உன்னை என்னால் ஏற்கவோ அங்கீகரிக்கவோ முடியவில்லை. என்னை, எனது மக்களை, எனது உலகத்தை நீ வதைத்துத் துவைத்துத் துவம்சம் பண்ணிக் கொண்டே அதை ஏதோ நீதிக்காகவே செய்வதாகப் பாசாங்கு பண்ணுகின்ற உனது கொடுமையை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை.

மனதாரப் பிழை செய்யும் பாதகர்களைத்தான் நீ மக்களை ஆள்வதற்கு அனுப்புகின்றாய். பொய்களால் பாமரர் மனங்களைக் கெடுத்து,

புதன், 1 ஆகஸ்ட், 2012

ஏங்காதே! தாங்கிச் செல்!

மாற்றிவிட்டாரென நீஏங்கி டாதே!
ஏமாற்ற வில்லைநான் எனஎழுந்து நில்
வஞ்சித்து விட்டாரே எனவருந்தி டாதே!
வஞ்சிக்க வில்லைநான் என்றிருந்திடு.

துரோகம்செய் தாரேயென நீ துடிக்காதே!
துரோகிநா னல்லனென துணிந்தெழுந்து நில்
விரோதம் வளர்ப்பதாய் நீவருந் தாதே!
விரோதிக்கே விளம்பரம் அதுஎன்றிரு.

சற்றாவது கேட்டால் நல்லதப்பா!

நீதியின் பாதை நிரந்தரமானது
  சத்தியத்தை நீ நம்பு!
பாதியே வாழ்க்கை முழுமையென்றில்லை
  உண்மையை நீ நம்பு!
ஊதிடும் செல்வம் நிரந்தரமில்லை
  உணர்ந்திருத் தல்நன்று
வாதிடும் சரிபிழை எதனிலும் ஒன்றே
  உண்மையில் இணைந்திருக்கும்.