செவ்வாய், 31 ஜூலை, 2012
பதார்த்தமும் யதார்த்தமும் (கட்டுரை)
சமுதாயத்தில் ஒளியுடன் நிழல் போல நல்ல மனிதர்களுடன் இணைந்து, எத்தர்களும் ஏமாற்றுக்காரர்களும் கள்ளக் குணாளர்களும் கபட நாயகர்களும் கடற்கரையோர மணல் கற்துளிகளாய் அளவுக்கு அதிகமாகவே பரந்து கிடந்து வதைகளையும் வாதைகளையும் விதைத்துக் கொண்டு, மிகவும் இலகுவான வழிகளில் வளர்ந்து கொண்டு இருக்கின்றார்கள்.
இவர்களாகத் திருந்துவதும் இவர்களைத் திருத்துவதும் கடினமாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இவர்கள் இயல்பாகவே இத்தகைய குணங்களின்
இவர்களாகத் திருந்துவதும் இவர்களைத் திருத்துவதும் கடினமாக இருப்பதன் அடிப்படைக் காரணம் இவர்கள் இயல்பாகவே இத்தகைய குணங்களின்
ஞாயிறு, 22 ஜூலை, 2012
சொறிச்சலுக்குச் சிகிச்சை தோலை உரிப்பதல்ல (கட்டுரை)
மனித பலவீனங்களில் மிகப் பெரிய பலவீனம்
விமர்சனங்களுக்கு அஞ்சி ஓடி ஒதுங்குவதும் விமர்சனத்தை விளங்க முனையாமல்
பகைக் கண் கொண்டு எதிர்க்க முனைவதுமாகும்.
எந்த மனிதனும் தன்னைப் பிறர் குறை சொன்னால் முதலில் ஆத்திரமடையவே செய்வான். காரணம், அது இயல்பான மனித மனத்தின் முதல் பிரதிபலிப்பு என்பதுதான். ஆதலால் அது தவறே அல்ல.
எந்த மனிதனும் தன்னைப் பிறர் குறை சொன்னால் முதலில் ஆத்திரமடையவே செய்வான். காரணம், அது இயல்பான மனித மனத்தின் முதல் பிரதிபலிப்பு என்பதுதான். ஆதலால் அது தவறே அல்ல.
சனி, 21 ஜூலை, 2012
வெள்ளி, 20 ஜூலை, 2012
புதன், 18 ஜூலை, 2012
மனிதன் படைத்த கொடிய மிருகமே, நீ என்றைக்குச் சாவாய்? (கட்டுரை)
ஒரு தெருவோரமாக நான் நடந்து கொண்டு இருக்கின்றேன். ஒரு குப்பைத் தொட்டிக்குள் கைவிட்டு ஒரு குழந்தை எச்சில் உணவு மிகுதி இருந்த பொட்டலத்தை எடுத்து அதை நக்குகின்றது. எனக்கு ஒரே அருவருப்பாக இருக்கின்றது. "சீ! என்ன கெட்ட பழக்கம் இந்தச் சின்னக் குழந்தைக்கு? இந்தச் சின்ன வயதிலேயே இப்படிப் பொறுக்கித் தின்ன விட்டுவிட்டு, இதன் பெற்றோர்கள் என்ன செய்து கொண்டு இருக்கின்றார்கள்?
வியாழன், 12 ஜூலை, 2012
வடிகட்டத் தவறினால் வழிகெட்டுப் போய்விடும் (கட்டுரை)
ஆடையில் தூய்மை அழகைக் கூட்டும்,
உணவில் தூய்மை சுகத்தைக் காக்கும்,
அறிவில் தூய்மை ஒழுங்கை வளர்க்கும்,
நடத்தையில் தூய்மை நல்வழி காட்டும்,
மனமதன் தூய்மை மனிதனை ஆக்கும்,
இதயத்தின் தூய்மை இகத்தையே மாற்றும்.
ஏழ்மை மிகுந்திருந்த முன்னைய ஒரு காலத்திலே கூட தூய்மையின் முக்கியத்துவத்தினை உணர்ந்திருந்த மக்கள் வாழ்ந்திருந்து வழி காட்டியிருக்கின்றார்கள். அவர்களில் ஒருவர்தான் "கந்தையானாலும் கசக்கிக் கட்டு" என்று அறிவுறுத்தி வைத்திருக்கின்றார்.

ஞாயிறு, 8 ஜூலை, 2012
அக்கரை மாந்தர்களே! கவனம்! இக்கரை பச்சையில்லை! (கட்டுரை)
தூரத்துக்கு அழகாகத் தெரிவது நெருங்கிடின் எதிர்மாறாக, அசிங்கமாக இருப்பதுண்டு.
விமானத்தில் பறக்கையிலே கீழே வடிவாகவும் நேர்த்தியாகவும் தெரிகின்ற நிலப்பரப்பு, இறங்கிப் பார்த்தால் கரடுமுரடான பாதைகளாகவும் மேடு பள்ளங்களாகவும் இருக்கக் கூடும்.
ஆகவே கற்பனைக்குக் குளிர்ச்சி அனுபவத்திலும் குளிர்ச்சியாய் இருக்கும் என நம்பிவிடுவது தவறாகிவிடவும் வாய்ப்பிருக்கின்றது. வெளிநாட்டு வாழ்க்கை சம்பந்தப்பட்ட கற்பனைகளும் அப்படித்தான்.

நீதிக்கு இனபேதமில்லை (சிறுகதை)
சனி, 7 ஜூலை, 2012
சும்மாவும் பாவம் வேண்டாம் (சிறுகதை)
கொழும்பு மாநகரம் தகதகவென எரிய, புகை மண்டல மணம் கமழ, இனவெறி மரண விழாக் கொண்டாடப்பட்டுக் கொண்டிருந்தது.
காலம் அது ஜூலை 1983 என்று சொல்லிக் கொண்டிருக்க, காலன் திக்கு முக்கெல்லாம் ஓடியோடிக் களைத்துக் கொண்டிருந்தான்.
அவனால் எடுத்துச் செல்ல முடியாதபடிக்குத் தமிழ் உயிர்களைச் சிங்கள இனவெறிக் காடையர்கள் நாலா திசைகளிலும் மிக மிக வேகமாகப் பறித்துப் பறித்துக் குவித்துக் கொண்டிருந்தார்கள்.

திங்கள், 2 ஜூலை, 2012
பிணமும் கொலை செய்யும் (சிறுகதை)
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)