சனி, 16 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 11



 





101.சுவையில்லா நிலையிலும் சுவைகளில் சிறந்தது சுத்தமாய் உள்ள 
       தண்ணீர்
       எவையில்லா நிலையிலும் நிலையாக நிற்பது பாசத்தின் தூய்மையென்பீர்!
 

102.செய்வதையெல்லாம் சுயநன் மைக்கென செய்தலே பொதுமன வடிவாகும்
       செய்வதில் பிறர்நலன் விழைந்ததை வகுப்பதே நற்குணப் பண்புடை 

       வழியாகும்
 

103.பணமது எல்லாம் செய்திடும் என்றே பகுத்தறி வற்றோர் நினைத்திடுவார்
       பணமதை எல்லார் நலம்பெறும் வழிக்கே எனபகுத் தறிவோர்    

      தெரிந்திருப்பார்
 

104.நன்றியை மறப்பார் காரணமென்றே நல்லதைச் செய்வதைத் தவிர்க்காதீர்
       நல்லதைச் செய்தல் நன்றியிலல்ல, செயலதில் புண்ணியம் மறக்காதீர்
 

105.விடைகாணமுடியாதகேள்வியென்றால் விடையதற் கில்லையென்று
       அர்த்தமில்லை
      முறையாக உணராமல் மறுப்பதனால் இறைசக்தி இல்லையென்று  

      ஆவதில்லை
 

106.கருப்பாக இருப்பதால் குயிலதன் குரலதை எவருமே வெறுப்பதில்லை
       வெறுப்பாக ஏழ்மையைக் கருதியே திறமையை அறிவுளார் மறுப்பதில்லை
 

107.உடற்சுத்தம், உடைச் சுத்தம் இரண்டினால் மனிதரின் தகைமைகள்                         உயர்ந்திடாது
       உளச்சுத்தம், செயற்சுத்தம் கொண்டராய் இருந்திடில் தகைமைக்குக் 
       குறைவிராது
 

108.வேடிக்கை யாகவும் பிறர்மனம் புண்படல் விழைந்துரை செய்தல் 
       வேண்டாம்
       தேடிச் சிறுமையை நாடிய   லைந்திடும் பிழைவழி கொள்ள வேண்டாம்.
 

 109.வருவாயை மட்டுமே வைத்ததில் மதிப்பவர் மனிதருள் தரம்குறைந்தோர்  
        வறுமையில் ஆயினும் உளத்தரம் கணிப்பரே மனிதருள் தரம் உயர்ந்தோர்

110.விளையாட்டுக் காகினும் பிழையாகப் பேசினால் பிள்ளைகள் மனம் 

      தவறும்
      விளையாட்டும் வழிகாட்டும் எனக்காட்டின் நல்வழி பிள்ளைகள் மனம் 

      உயரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக