சனி, 23 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 13



 




121.தீயவன் நல்லதைத் தீமையாய்ச் சொல்லித்தன் தீமையை நல்லதென்பான்       இயங்கிடும் நல்லதை இயங்காது தடுக்கவே அவனதைப் பரப்ப நிற்பான்

122.தன்னலம் பேணவே நீதியை மறுத்துநல் மனிதத்தை ஒதுக்கும்நாடு                 
       என்னலம் சொல்லியும் என்னதான் செய்யினும் அப்பாவம் தப்பிவிடாது


123.வாவென்னும்உதடுகள்  நம்பிஉள் நுழைபவை பல்லுக்குள் அரைதல்நேரும்
       வாவென்று வரவேற்கும் தீயரால் பின்னாளில் துயரமே நம்மைச்சேரும்


 124.துன்பத்தில் மறைபவன் நட்பென்று தெரிந்தால் தூரத்தில் நிறுத்திநீ வை
       இன்பமும் துன்பமும் தனதென்று வந்தானை இதயத்தில் நிறுத்திநீ வை

125.உள்ளத்தை ஒழுங்காக வைத்திரா மனிதரின் எழுத்திலே பொய்யிருக்கும்
      கள்ளமாய்க் கள்ளோடே பாலவர் கலப்பதால் சமுதாயம் நலமிழக்கும்

126.வதைவந்து வருத்துமுன் நோய்வரா வண்ணம் நாம் வாழ்தற்குமுயலல்    

       வேண்டும்
     இதை அன்றே உணராமல் இன்றைக்குநான்படும் பெரும்பாடு போதும்
       போதும்


 127.புதிதென்றும் அரிதென்றும் பெருமைகொள்விதமெங்கும் என்றைக்கும்                   எதுவுமில்லை
        எதிலெடுத்துப் பார்ப்பினும் முன்னறிந்தோர் பகிர்வன்றி புதிதாக                                எதுவுமில்லை 
 

 128. நாம்வாழும்சூழ்நிலை எதிராகத் தெரிந்திடில் எதிர்த்துநில் ஓடிடாதே!
         நாமாக வெல்லாமல் நமைவெற்றிசேராது!எப்போதும் மறந்திடாதே!

129..கைகூப்பிக் கடவுளை வணங்கிடும் எவரையும்நல்வராய்நம்பிடாதீர்                      கைகூசாக் கள்வரும் வணங்குவார் கடவுளை நமைஏய்க்க, மறந்திடாதீர்

130.விழிநின்று வடியும்நீர் துக்கத்தைத் தெரிவிக்கும் என்பார்கள்பொதுவாக              விழியிலே நீர்வரும் மனமெல்லாம்நிறைவாகும் மகிழ்விலும் மறவாதீர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக