செவ்வாய், 12 மார்ச், 2013

பாதைக் காற்று






மனம் மறைத்துப் புன்னகையில் நட்புரிமை பேணுவரில்
தினம் பகைகொள் கெட்டவர்கள் நமைக் கடத்தல் தெரிந்தால்
வனம் நடுவில் கலந்திருக்கும் கொடுவிலங்கைப் போல்மனிதர்
சனம் இடையில் நல்லவர்போல் தீ இருக்கும் நிலை புரியும்.

பணமிருப்பின் பெரியரெனப் பயந்தொதுங்கும் பாமரரும்
குணமிருப்பின் பணத்தினொடு அவர்மதிக்கும் நல்லவரும்
பணம் பறிக்கும் பாதகரின் கபடங்களில் வீழுவரும்
இனம்பிரித்துக் கண்டுவிடும் ஆற்றலில்தான் வெற்றிவரும்.

பண்புநிறை நல்லவராய்  இருப்பரில்  ஏழைகளைக்
கண்டுமவர் ஏற்பதற்கும்  உதவுதற்கும் தயங்குபவர்
உண்டு என்று கண்டு அவர் போல்தெரியும் போலியரை
நின்றுணர்ந்து கண்டிடலும் உலகுணற் குதவிதரும்.
 
இலகுவான வெற்றிவழி தோல்விகளின் பதுங்குகுழி!
இலகுவான நட்புகளோ இருளில்தள்ளும்! புரிந்திரு;நீ!
சலசலப்பு  உள்ளஎதும்  வெற்றிகளின் தடுப்பெனநீ
நலம்விழையின் புரிந்திருந்தால் திறக்குமுனது வெற்றிவழி!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக