திங்கள், 18 மார்ச், 2013

சிந்தனைக் கூறுகாய் 12

111. பலவிதம் மரங்களும் செடிகளும்ஒருமண்ணில் எழுந்திடல் அதனதன்  
        தனித்துவத்தால்
       பலவிதம் மனிதரும் இயங்கிடும் குணங்களில் திகழ்ந்திடல் மனங்களின்            இயல்குணத்தால்

112. வெளிக்கு வடிவாய்த் தெரிபவர், உரைப்பவர் உண்மையில் எவரென                        ஆயாமல்
        களிப்புடன் அவருடன்உறவினை வளர்த்தால் பழிகளே சேரும் தவறாமல்

113.  மண்ணினில் விளையும் பொருட்களை உண்போம் மண்ணைஅதற்காய்      
         உண்போமா?
        நன்றாய்ப்பேசிடும் ஆட்களின் உள்ளம் பொருந்தேல் உறவாய் ஏற்போமா?

114. வெண்மை அமைதிக்குஅடையாளம் அதுபோலத் துயருக்கும்அதுவே
        அடையாளம்
       வெண்மை பேச்சினில் உருவினில் எனினும் உள்மனம் பலருக்குக்
        கருப்பாகும்

115.  அருகால் மறந்தே நடந்தாலும் தீமையின் வாதனை நமைத்தொடலாம்        
         பெரும்பா லும்நம் சிந்தனைப்பிழையால் துன்பம்தொடர்ந்தே உடன்     
          வரலாம்
 
116. அஞ்சியே தீவழிநின்றுமே ஒதுங்குதல்  என்றைக்கும் நலன்
         பயக்கும்               
       ஆழத்தை அறியாது அதனோடு இணைந்திடில் இருப்பதும் தகர்ந்தழியும்

117.  பன்னூறு விதமாகப் பானங்கள் செய்துநாம் (உ)ருசி கூட்டிப் பருகினாலும்
        என்றைக்கும் மனமேற்கும் நன்னீர்போல் தாகத்திற் கேற்றது            

        எதுவுமில்லை
 

118. பல்லாயிரம் மரங்கள் சூழ நின்றாலும் பழம்தரு மரமே பசிக்கு உதவும்                   எல்லா உறவுகளும் எங்கிருந்தாலும் இல்லறமே தரம்காக்க உதவிநிற்கும்

119. நாளைய சந்ததியின் நலனதையும் காப்பினையும் திட்டமிடா அரசு                          வேண்டாம்
       கோழைகளும் திருடர்களும் சுயநலரும் காட்டும்வழி எள்ளளவும் அணுக             வேண்டாம்

120. உண்மையை உணர்த்துவதும் எழுதுவதும் சொல்லுவதும் நன்மைசேர                 உதவிசெய்யும்
       மென்மையையே தழுவிடினும் சுயநலமே நோக்கமெனில் தீமைக்கவை              விதைவிதைக்கும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக