செவ்வாய், 31 ஜூலை, 2012

நல்லா இருக்கக் கத்துக்கணும்

ல்லவற்றைப் பார்ப்பதற்கு நல்லவர்கள் துணை வரேல்
நல்லவற்றைப் போலகெட்ட பாதை தீயவர்கள் காட்டலாம்
பல்விதமும் கெட்டதையே நம்மனங்கள் நாடவே
பல்வழியும் நமைஇழுத்து
நம்தரம்கீழ் ஆக்கலாம்.

நல்லவற்றைக் கேட்பதற்கு நல்லவர்கள் இல்லையேல்
நல்லவற்றைக் கெட்டதெனக் கெட்டவர்கள் காட்டுவார்
சொல்லதனின் பொருளதனை உள்ளம்சொல்லா விதமதனில்
சொல்லவிழைந் தாரெனவே பொருளகற்றிப் பகர்ந்து வைப்பார்.

நல்லவற்றைப் பழகுதற்கு நல்லவர்கள் இல்லையேல்
நல்லவற்றைப் போலகெட்ட வழிகளை யவர் காட்டுவார்
நல்லவர்கள் போல்நடித்து அவர்குணங்கள் பால்நமை
நல்லதென எண்ணிநம்பி இழுபடவே செய்குவார்.

நல்லவழி நல்லவரைத் தெரிவதற்கு ஒன்றுதான்
நல்லவிதம் அவர்அறிந்து தெளிந்து பின்பு சேரல்தான்
நல்ல நட்பு, நல்உறவு, நல்ல துணை யாவையும்
நல்ல வாழ்வின் அத்திவாரத் தூண்கள் என்றும் உண்மைதான்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக