ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 4





31. காமமே மனிதனின் அடிப்படை எனினது பாவமே நெறி பிறழின்
     சாகவும் விடுமது நோயினை அழைத்தே ஒழுக்கத்தில் அதுதவறின்


32. இனியசொல் இதயத்தைப் பண்படுத்தும் என்றைக்கும் வசைச்சொல் 
      புண்படுத்தும்
      இனியதைச் செய்கின்ற ஒவ்வொரு கணத்திலும் இருப்பதில் பலனிருக்கும்

33. உடுத்திடும் உடையது மனிதரின் குணநலன் விளக்கிடும் கண்ணாடி
      உரைப்பவர் கருத்ததன் தூய்மையே அவரது உள்ளத்தின் கண்ணாடி

34. இருப்பதை ஒளித்ததைப் பதுக்குவர் அதனாலே பெறுவதோ மனத்துயரே!
      இருப்பதை இல்லார்தம் நலம்பெறப் பயன்செயல் அதற்கொரு நல்மருந்தே!

35. அடுத்தவர் நலமதை விரும்பிடும் இதயத்தில் குடிவரும் நற்குணங்கள்
      அடுத்தவர் நலமதில் காழ்ப்புறும் இதயத்தில் குடிவரும் தீக்குணங்கள்

36. உண்மையை ஏற்றிடும் உளமதைக்கொண்டிடில் திண்மையின் விதை   
      புதையும்
      நன்மையே விழைந்திடும் இலட்சியம் இருந்திடில் சுயநெறித் தரம் உயரும்

37. உள்ளதை உரைப்பதே உண்மை,பொய்யினை அதுபோலஉரைத்தல்கயமை
     நீதியைக் காப்பதே கடமை மறைத்ததை அழித்தற்குமுயலல் கொடுமை

38 .இறைவனைக் காண்பதுன் தூயநோக்கென்றால் தர்மத்தில் இணைந்துநீ பார்
     இறையவன் இயக்கத்தைக் காணலுக்கென்றால் இயற்கையை உற்றுநீ பார்

39. கும்பிடும் தெய்வமும் உன் கரம் இயங்க◌ாமல் உணவினை ஊட்டிடாது
      தெம்பிருந்தும்நீ உழைத்திடல்தவிர்த்தையேல்வெற்றியைச் சேர்த்திடாது

40. அறிவு என்பது அறிந்ததில் தெளிவதே அகந்தையை வளர்ப்பதல்ல
      புரிந்திடல் கல்வி அது வெறுமனே பார்ப்பதால்அறிந்திடும் முயற்சியல்ல

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக