வியாழன், 18 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 7









61.விமர்சனம் என்பதை ஊக்குவிக் கும்கலை என எண்ணிச் செய்து 
      வந்தால்
     விசமத் தனங்களைச் சொற்களால் செய்திடும் மதியரைத் தவிர்த்தல் 
     கூடும்


62. கற்றதை மற்றவர் நலம்வேண்டிப் பகிர்வதில் மனம்நிறை கின்ற  
      உள்ளம்
      கற்பனை சேர்த்துஅதை அழகாக அமைத்தலே இலக்கியப் படைப்பு 
      ஆகும்

63. தீவைக்கும் பாவியே அணைப்பனாய் நடிப்பது அரசியல் களத்துக் 
       கூத்து
      நீதியை மறைப்பதும் மறுப்பதும் திரிப்பதும் சமுதாயக் கூளிக் கூத்து

64. “வணக்கம்” என்னுகையில் நம்மிருகரங்களும் இணைவது 
        பகர்வதென்ன?
      வணங்கிடும் இறைவனை எதிரினில் நிற்பவன் தனில்உணர் 
      என்பதைத்தான் 

65. கண்முன்னே தன்னினம் கொலையுண்டுஅழியினும் எறும்புதன் 
      கடமை விடாது
      மண்மீட்க பலருயிர் பலியாகக் காணினும் களவீரர் மனந்தளராது

66. காமமே கருவதாய் உள்ளத்துள் எழுந்து பின் காதலாய் உருவாகும்
      காதலின் உண்மைபயின் பலமதே மனதுக்குள் ஒழுக்கத்தைப்  
      பதிவாக்கும்

67. அழகெனக் கொள்ளல் அனைத்திலும்உண்டு மனமது அதை 
        உணர்ந்தால்
      அழகினை இதுதான் என வகுப்பதுவோ உண்மையில் மனநிலைதான்

68.  அறிந்ததை ஆழ்ந்ததை உணர்ந்திட முனைந்திடல் சிந்திக்கும் 
        வழியைக்  காட்டும்
        அறிந்ததைப் பெரிதாக அகந்தைக்குள் திணித்திடில் சிந்தனை 
        பிழையாய்ப் போகும்

69.   எவரையும் நம்பலும் எல்லாமும் உரைப்பதும் என்றைக்கும் 
        நல்லதல்ல
        சுவரதும்நம்பற்றி ஒற்றுக் கேட்டல; உண்டென்ற உண்மையை 
        மறத்தலும் நல்லதல்ல

70:    குடிநீர் எனஏற்றுக்  கண்டதை  அருந்திடில் நோய்கள்நம் கூடவரும்
        வடிகட்டிப் பார்க்காமல் நட்பினை அமைத்திடில் துன்பங்கள் தேடி 
        வரும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக