வெள்ளி, 5 அக்டோபர், 2012

முயற்சி

திரும்பத் திரும்பச் சுழல் உலகினைப் பார்!
விரும்பிப் பலன் தேடாமல் உழைப்பதைப் பார்!
உருளும்பணி உலகமே நிறுத்திடும் கால்
உருப்படும் விதமெதுவும் இருக்குமோ பார்!

இயற்கையைச் சற்றுநீ உற்றுமே பார்!
இயக்கத்தில் அதுசோரக் கண்டதுண்டா?
தயக்கமும் தளர்தலும் ஓய்வுமின்றி
இயக்கமே அனைத்திலும் இருப்பதைப் பார்!

உனக்கென்ற பாதையும் அந்த வண்ணம்
தினம் உன்னை இயக்கவே வழியமைத்தால்
உனக்கென்று தனியிடம் தரணி காட்டும்
கனவென்று கருதாமல் முயன்று பார்நீ!

முயலாது முன்னேற்றம் தேட நின்றால்
புயலாகும் எதிர்காலம் என்பதை நாம்
செயலாக்கி உணர்வதை வெளிப்படுத்த
முயலலேல் வறுமைதான் உடன் இருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக