சனி, 13 அக்டோபர், 2012

இயலாத முழுமைகள









முழுமையாக எதனையும் அறிந்துவிடல் இயலாது
முழுமையாக எதனையும் புரிந்திடுதல் இயலாது
முழுமையாக எவரையும் கணித்திடுதல் இயலாது
முழுமையாக எதனிலும் நிறைவுபெறல் இயலாது

முழுமையாக இயங்குவதைப் புரிந்து கொள்ளல் இயலாது
முழுமையாக அறிந்தவையாய் எவையுமிருத்தல் இயலாது
முழுமையாக எவரறிவும் தீர்வுறுத்தல் இயலாது
முழுமையாக நிரந்தரமாய் எதுவுமிருத்தல் இயலாது

முழுமையாக எதையுமில்லை எனக்கருதல் இயலாது
முழுமையாக எதிலும் எதையும் அறிந்து புரிதல் இயலாது
முழுமையாக வாழ்வின் நோக்கம் தெரிந்துகொள்ளல் இயலாது
முழுமையாக எவரின்மீதும் குற்றம் காணல் இயலாது
முழுமையாக கல்விகற்ற மனிதர் இருத்தல் இயலாது
முழுமையாக ஒன்றுமறியா மனிதர் இருத்தல் இயலாது
முழுமையாக எவர்க்கும் எதையும் எவரும் செய்தல் இயலாது
முழுமையாகக் குறைஉணரேல் வாழ்க்கை என்றும் உயராது

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக