சனி, 6 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் 01

1. றவென்ப துலகினில் பகைசெய்யா அனைத்துமே எனுமெண்ணம் தரமுயர்த்தும்
   பிறர்நலம் விழைகின்ற பலன்தேடாப் பணியெலாம் சிறப்புடைத் தரம் வழங்கும்.

2. ரம்கொண்ட உள்ளமே வெற்றியின் பாதையின் அடிப்படைத் தகுதியாகும்
    கரம்புரி பணிகளின் வெற்றியும் தோல்வியும் மனம்செய்யும் தெரிவில் சாரும்.


3. புலர்கையில் மகிழ்பவன் இரவதன் நியதியை உணர்வதே அறிவு ஆகும்
    மலர்வதே வாடுதல் முடிவென்னும் வாழ்க்கையை உணரலே அறிவுஆகும்.

4. றைவனை உணர்வதும் ஏற்பதும் மறுப்பதும் இதயத்தின் பக்குவம்தான்
   குறைதேடிப் பழிப்பதும் இகழ்வதும் அறிவெனல் அறிவின்மை என்பதைத்தான்.

5. யிரது இருக்கையில் உடலதன் ஆட்டம் உயிர் நீங்கின் மறைந்து போகும்
   பயிரதே உணவதாய் நிரம்பினும் அதுநீங்கிப் பசியதே மீண்டும் தோன்றும்.

6. ல்வியின் பயனதை உணர்த்தாத கல்வி கல்விபோல் தெரியும் மாயை
    எல்லையில் லாததேகல்வியின் அளவென உணர்வதே அறிவின் பாதை.

7. ற்றவன் உயிரையும் கல்லாதான் குருதியால் காத்திடல் மனிதமாகும்
    மற்றவன் வாழவே தன்னலம் மறுப்பமை ஆண்டவன் பக்தியாகும்.

8. ண்ணத்தின் குழைவினில் வருகின்ற ஓவியம் ஓவியன் தனின் ஆற்றல்
    எண்ணத்தின் சக்தியை வார்த்தையில் வடிப்பது சிந்தனை தனின் ஆற்றல்.

9. ணராத உண்மைகள் உண்மையின் நன்மையை உணர்த்தாமலே போகும்
    உணர்த்தாத உண்மைகள் உண்மையில் உண்மையாய் இல்லாமலே போகும்.

10. பிடிவாதம் நீதியில் சார்ந்ததாய் இருக்கையில் தர்மத்தின் நிழலில் நிற்கும்
    பிடிவாதம் நீதியை மறுத்திடல் செய்கையில் அழிவினைச் சேர்க்க நிற்கும்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக