வெள்ளி, 12 அக்டோபர், 2012

உள்ளத்தின் பிம்பங்கள்







த்தியம் சாராத தீயவர் கட்
புத்தியில் தீயவை நல்லதாய்த் தோன்றும்
கத்தியில் நம்பிக்கை வைப்பவர் கட்கே
சத்தியம் இதயத்தைக் கத்தியாய்க் குத்தும்.  

எத்திசை நிற்பினும் கண்கெட்ட வர்க்கே
அத்தனைக் காட்சியும் இருளாகத் தோன்றும்
உத்தமம் இல்லாத இதயங்க ளுக்கே
அத்தனைக் காட்சியும் குறைதேட வைக்கும்.

கருத்தினால் பிழைசுட்டும் அறிவாற்ற லுக்கே

திருத்திடப் பிழைவழி சரியாகத் தோன்றும்
வெறுப்பினை உளம்வைத்து பொய்செய்ப வர்க்கே
பொறுப்பற்றுப் பழிசொல்லும் குணம்கூடி நிற்கும்.

பொதுமக்கள்  நலம்பேணும் உயர்மக்க ளுக்கே

பொதுத்தொண்டில் சமத்துவம் சரியாகத் தோன்றும்
பொதுத் தொண்டில் பொய்யேந்தும் கள்வர்க ளுக்கே
பொதுமக்கள் அழிப்பதும் அரசியல் ஆகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக