புதன், 10 அக்டோபர், 2012

சரி புரிந்தால் வழி தெரியும்

ரியாகப் புரியாமல் சிந்திக்கும் மனங்கட்குச் சரியாகப் பிழைகள் தோன்றும்
புரிந்ததில் உண்மையைத் தேடிடும்உள்ளமே சரியினைச் சரியாய்க் காணும்
வானத்தில் கண்ணுக்குத் தெரிவதை வில்போல வானவில்என்று சொல்வார்
ஞாலத்தின்மறுபுறம் சேர்த்ததைப் பார்ப்பரே அதுவட்டம் என்றுணர்வார்.

மலைகளும் நதிகளும் கடல்களும் கண்ணுக்குக் கவர்ச்சிதான் என்பதற்காய்
அலைதாண்டி, மலைதாண்டி, நதி கடந்;தேறுதல் சிந்திக்கா தியலுமாமோ?
நிலையாக வாழ்க்கையை நம்பிடும் மடைமையே பிழைசாரத் துணிவு சேர்க்கும்
நிலைமாறி, உருமாறி இறைவழி திரும்பலை உணர்தலே உளம் திருத்தும்

தெரிந்துமே பிழைசெய்யும் கொள்கைக்குக்காரணம் சரியதாய் உள்ளம் சொல்லல்
புரிந்துமே பிழைசார்ந்துஉயர்வினைத் தேடுதல் பாவத்தின் அடிப்படைக்கல்
சரியென்றே தெரிந்தாலும் சரிதானா எனத்தேடிவிடைகாணல் சிந்தனைக்கல்
சரியென்றோ பிழையென்றோ புரியாமல்ஒன்றையே தொற்றுவான்வெறும்கருங்கல்

ஆண்டென்று சொல்லுவார் இலக்கமாய்க்காட்டுவார் உருவாயதைக்காட்டுவாரா?
மாண்டால் நம்பிணமென்று சொல்லுவார் பிணமின்றில்; நமைஉருக் காட்டுவாரா?
தோண்டியே பார்க்காமல் மண்ணுக்குள் தங்கமும் வைரமும் வந்திடாது
தூண்டிநம் உள்ளத்தைத் துளைத்துநாம் தேடாமல் இறைவனைத் தெரிந்திடாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக