திங்கள், 15 அக்டோபர், 2012

தடத்தைப் பதிக்குமுன் தளத்தை உணர்ந்து கொள்! ( கவிதை)





முன்னெண்ணம் இன்றிநீ புதிதாக எதனிலும்
               முடிவுகள் எடுத்திடாதே! - எந்த
நன்மையும் சரியாகப் புரியாமல் வருமென
                நம்பிநீ இறங்கிடாதே! - என்றும்
இருக்கின்ற நிலைமைக்குள் சரியாக வகுக்காமல் 
                இதை அதைச் செய்திடாதே! - என்றும்
வருகின்ற இலாபங்கள் பலனவை  எல்லாமே 
                உறுதியேல் விட்டிடாதே!



அனுபவம் இல்லாமல் செய்பிழை மட்டுமே
              அனைத்திலும் தோல்வி சேர்க்கும்  - சொந்த
அனுபவ்ம் சேர்ந்ததாய்த் தீட்டிடும் திட்டம்
                அனைத்தையும் பாதுகாக்கும் - எங்கும்
அனுதாபம் தேடிநீ பணிவெல்ல முயன்றிடின்
                அனைத்திலும் தோல்வி சேரும் -  சொந்த
அனுபவம் தரும்பாடம் உணர்ந்துநீ நடந்திடில்
                 வெற்றி மேல் வெற்றி சேரும்


இன்முகம் வைத்திரு; எவரையும் மதித்திரு!
                இகமுன்னைச் சூழ்ந்து நிற்கும் - எந்த
நன்மைக்கும் எதிர்பார்த்து நல்லதைச் செய்திடின்
                 தின்மையுன் பின்னில் நிற்கும் - உன்றன்
கண்சொல்லும் எதனையும் நம்பாமல் மனம்சொல்லும்
                  உண்மையை ஏற்றல் வெல்லும்! - எந்தப்
பண்பிலும் உயர்ந்ததாய் மனிதத்தை மதித்திரு
                   பண்பட்டு உயர்ந்து நில்லு!

                 
கல்லான இதயங்கள என்றென்றும் கரையாது
                  கல்லின் குணம் கரைவதன்று - எந்தப்
பொல்லானும் இயற்கையில் நில்லனா?
                  திருந்துவான் என்று நம்பு! - எந்தப்
பாதையில் வெற்றியை நாடிநீ செல்லினும்
                   பார்த்ததில் தீதைத் தவிர்த்தால்  - என்றும்
வாதையே இல்லாத வாழ்க்கை வாழுவாய்
                   வார்த்தையை நம்பிச் செல்லு!
                

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக