ஞாயிறு, 14 அக்டோபர், 2012

சுயசூடே தரமுணர்த்தும் (கவிதை)







எழஎழ விழுந்தேன் என்றாலும் எழுந்தேன்
தொழத்தொழத் தளர்ந்தேன் என்றாலும் தொழுதேன்
பழகிடப் பழகிடப் பலரேய்க்க அழுதேன்
பழமென இனித்தவை நஞ்சாக அதிர்ந்தேன்


ஒருவரா இருவரா  பலநுாறு பேரில்
ஒருவராய் இருவராய் நல்லவர் கண்டேன்
வெறும்மணல் நிறைவெளிப் பாலையின் உருவாய்
வெறும்மர மனிதரை நிறையவே கண்டேன்

மனமது ஏற்கா மனிதரின் தோற்றம்
மனத்தர நிலையதில் அழகதன் உச்சம்
மனமது உணர்த்தா நிலையதில் அழகு
மனமது உணர்த்திடில் பலதினில் கழிவு

நல்லவர் தீயவர் உயர்ந்தவர்  தாழ்ந்தோர்
நல்வழி ஒழுகிடும் விதமது காட்டும்
நம்வழி எதுவென நம்மனம் காட்ட
நம்வழி தனைப்புடமநாம்போடல் வேண்டும்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக