செவ்வாய், 16 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 6







51. விதைகளே பெருமரம் ஆவன என்பது மாறாத நியதியென்றால்
      விதியதே முன்பின் மாறாத வழியென நம்புதல் எவ்வண்பிழை?

52. முயல்வதுஎதற்கு எனமனம்உணரா பணிகளில் என்றைக்கும்
      வெற்றியில்லை
      முயல்வதன்பணிகளில் மனிதத்தைஇணைத்திடின்அதன்வழி                             
     தோற்பதில்லை
53. ஆட்சிக்கு  மக்களைப் பேதமாய்ப் பார்ப்பரைத் தெரிந்திடல்பெரும்பாவம்             வீழ்ச்சிக்குள்தேசத்தை வீழ்த்திடத் தூண்டுதல் பிரித்தாளும் இனக்(கு)ரோதம்

54. அநீதிக்குச் சுயமுகம் இல்லையென்பதால் அதுபன்முகம் காட்டி
       நிற்கும்   
      நீதியைக்காட்டியே அதுவாழமுயல்வதால் தனைநீதியாய்க்காட்ட
      பொய்யும் சொல்லும்

55. ஒன்றுக்குள் நூறாகப் பயிர்களே விளையுதே! மனிதனே உனக்குப்
      பின்னால்
      நன்றாக உன்னாலே உலகத்தின் நலம்தேடி எவருக்கு எவ்வண்ணம்   என்ன        செய்தாய்? 

56. உயரமாய் இருப்பதால் பயனில்லை மரமதன் அடிவேரில் பழுதிருந்தால்
      உயர்ந்தனாய்க் காண்பவன் உண்மையில் கீழவன் ஒழுக்கத்தில்
      பிறழ்ந்திருந்தால்        

57.  பிழையையும் சரியென வலுசேர்க்க முனைபவன் இருமடங்கு குற்ற வாளி
      அழைக்கிறான் அன்புடன் எனநம்பி இணைவனவன் பிழைவிழுங்கும்                   நோயாளி

58.  வழியென்று ஒன்றினை வகுக்காமல் வாழ்பவன் இலகுவாய்ஒழுக்கத்தை
       மறுதலிப்பான்
      குழியிலும் துயிலினும் கூண்டினுள் துயிலினும் ஒன்றுதான்எனஅவன்      
        அறிவுரைப்பான்

59.  பள்ளியை உணராத, அறியாத விலங்குகள் விதிவைத்துவாழும்போது                  புள்ளிக்கும் உதவாத கெடுவழி வியென்று கற்றவர் செல்வதும் ஏன்?

60.  நியதியை வகுக்காமல் வாழலைச் சுதந்திரம் எனஓதும் பெரியரெல்லாம்
      நியதிவைத் தேயவர் தாம்கற்ற கல்வி  தவறென்று உரைப்பராமோ?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக