திங்கள், 15 அக்டோபர், 2012

எழாத வீழ்ச்சி எதற்கு உனக்கு? (கவிதை)




சரிந்துநீ விழுந்தையேல் பலவீனம்அது  வாகும்
சரிந்துசெய் பயிற்சியேல் அது பலம் சேர்க்கும்
புரிந்ததாய் நடித்திடில் அவை உனைத் தூற்றும்
புரிந்துநீ உரைத்திடின் அவைஉனைப் போற்றும்



கரங்களின் ஆற்றலே கட்டிடம் ஆகும்

விரல்களின் ஆடலே ஓவியம் ஆகும்
பிறர்தரு அறிவுரை மதித்ததை ஆயின்
தரம்மிகு சிந்தனைக் கடித்தளம் சேர்க்கும்


பிடிக்கின்ற பிடியதில் பலம்இல்லை என்றால்

பிடிபட்ட பொருள்நம்மை விட்டோடிப் போகும்
படிக்கின்ற எதனையும் பதித்தடல் விட்டால்
வடிகட்டிபோல் மனதுள் சக்கையே சேரும்

படிக்காத பாடங்கள் பலகோடி உண்டு
படித்தவர் கருத்துக்கள் பலகோடி உண்டு
படிப்பதைப் பழக்கமாய் ஆக்கிநீகொண்டால்
படிப்பத◌ால் மெதுவாகும் மனநிலை காண்பாய்!


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக