திங்கள், 15 அக்டோபர், 2012

சிந்தனைக் கூறுகாய் - 5









41. தனியாக இருக்கையில் பெரிதான ஆமைகள் கடலினில் சிறுத்துப் போகும்
     இனியென்றில்லாத பெருமையும் புகழதும் காலத்தால் கரைந்து போகும்

42. பார்த்திடல் வாசினை, படித்திடல் அறிந்திடல், புரிதலே கல்வியென்றால்
     கற்றதைக் கடமையாய் நல்வழிச்செலுத்தலே கல்விக்குப் பெருமை                       என்பேன்.

43. உண்மையில்திண்மை கொண்டிணைவதுதான் மனிதரில் ஆண்மைநிலை
     சொல்லிலே ஒன்றும் செயலிலே ஒன்றுமேல அலிபோன்ற இரட்டை நிலை

44. நிரந்தரம் இல்லாத மனிதனின் மார்க்கங்கள்  நிரந்தரம்ஆவதில்லை                       நிரந்தரம் உள்ளானின் இயற்கையின் பாதையின் நிரந்தரம் மறைவதில்லை
 

45. அனுபவம் கூறிடும் நல்லுண்மை யைக்கூட அறிவில்லார் ஏற்பதில்லை
    அடுத்தவர் நலமதைச் சுயநலம் மிக்கவர் புரிந்தாலும் விழைவதில்லை

46. மனதினில் உறுதியும் அனுபவந் தனைப்போல் சிந்தனைத் தெளிவு தரும்
      தனமதைச் சரிவழி வகுத்ததில் விழைந்திடில் நேர்மையின் பலன் புரியும்

47. வெண்பனி மெதுமை குளிர்சுமந் திருக்கும். இயற்கையின் தன்மையது.
       பண்புடன் கடுமையும் சேர்ந்தே இருக்கும். நட்பதன் உண்மையது

48. மருந்தது பயன்தரும் உடலதை ஏற்றால், அன்றேல் பயனிழக்கும்              
      அறிவுரை பயன்தரும் மனததை ஏற்றால், அன்றேல் பயன்தடுக்கும்

49. இரண்டும் இரண்டும் நான்கெனும் விதியது என்றைக்கும் மாறாது
      இறைவனும் விதியாய் நமக்கென விதித்ததும் என்றைக்கும் மாறாது

50. தன்னைநன் குணர்ந்து தனிவழி நடந்தால் தரணியில் உயர்வு வரும்

      தன்னைப் பிறர்விதம் உயர்த்திட முயன்றால் தனித்துவம் தொலைந்து             விடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக