வெள்ளி, 19 அக்டோபர், 2012

பதம் பிழைத்தால்....... (கவிதை)


   


 பதம் பிழைத்தால் சுவைக்கும் கறிதன் சுவையினை இழந்து போகும்
பதம் பிழைத்தால் இசைக்கும் கருவியதன் பயனும் கேள்வியாகும்
பதம் பிழைத்தால் நட்பும் கெடுகின்ற சூழ்நிலை தோன்றக் கூடும்
பதம் பிழைத்தால் உறவுகள் பலவும் விலகும் சூழல் தோன்றும்


பதம் குறைந்தால் விருந்தின் வெற்றியே கேள்விக் குரியாயாகும்
பதம் குறைந்தால் நட்பின் தொடர்ச்சியும் கேள்விக் குரியாயாகும்
பதம் குறைந்தால் இதம் இழந்தவர் என்றே சூழல் பேசும்
பதம் குறைந்தால்  நலம் விழைவரும் நம்மை விலகல் நேரும்

பதம் இழந்தால் வெற்றிப் படிகளை நாமே உடைக்க நேரும்
பதம் இழந்தால் நட்புச் சூழலை நாமே கெடுத்தல் நேரும்
பதம் இழந்தால் எங்கும் எதனிலும் வெற்றி கேள்வியாய் மாறும்
பதம் குறைந்தால் நமது எதிரியில் நண்பர்கள் சார்ந்திடல் நேரும்

பதம் சிதறா விதமதில் இருந்தால் எவரது நட்பும் கூடும்
பதம் சிதறா விதமதில் நடந்தால் எதிர்ப்புகள் தகர்ந்தே போகும்
பதம் சிதறா விதமதில் பழகின் பகைகளும் நட்பபதாய் மாறும்
பதம் சிதறா விதத்தில் வாழ்ந்திடில் மதிப்பதும் புகழதும் கூடும்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக